பிரம்மாண்ட இயக்குநரின் படத்தில் கீர்த்தி சுரேஷ்!

  திஷா   | Last Modified : 01 Jul, 2018 07:40 pm

ss-rajamouli-to-cast-keerthy-suresh

தனது சிரிப்பிற்காக கேலி, கிண்டலுக்கு ஆளாகியிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் படத்தில் நடித்ததன் மூலம் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்து விட்டார்.  சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான அதைப் பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் கீர்த்தியை மனதார பாராட்டி வாழ்த்தினர். 
 
இதில் முதலில் கீர்த்தியை பாராட்டியவர் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி தான். உடனே ராஜமெளலியின் அடுத்தப் படத்தில் கீர்த்தி நடிப்பார் என செய்திகள் வலம் வரத் தொடங்கின. இப்போது அது உறுதியாகும் வண்ணம் இருக்கிறது. தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்துத் தனது அடுத்தப் படத்தை இயக்குகிறார் ராஜமெளலி. RRR எனவும் அந்தப் படத்திற்கு பெயரிடப் பட்டுள்ளது. 

இரண்டு ஹீரோயின்கள் உள்ள இந்தப் படத்தில் ஒரு நாயகியாக கீர்த்தியை 'டிக்' செய்திருக்கிறாராம். இது தொடர்பாக கீர்த்தியுடன் பேச்சுவார்த்தையும்  தற்போது நடந்து வருகிறது. ஆனால் ராம் சரண், ஜூனியர் என். டி.ஆரில் யாருக்கு ஜோடியாவார் கீர்த்தி, என்பது பற்றி தெரியவில்லை. 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close