இது தான் டைட்டிலா?? சிம்பு - வெங்கட் பிரபு செய்யும் அட்ராசிட்டி!

  SRK   | Last Modified : 02 Jul, 2018 09:00 am

simbu-and-venkat-prabu-movie-gets-a-weird-title

சமீபத்தில் ஏற்பட்ட படத் தோல்வி, தயாரிப்பாளருடன் பிரச்னை, அரசியல் கமெண்ட்ஸ் என எந்நேரமும் சர்ச்சைக்கு நடுவே வாழ்ந்து வந்த சிம்புவின் சினிமா வாழ்வில் பல புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. மணி ரத்னத்துடன் செக்கச்சிவந்த வானம், கார்த்திக் நரேன் மற்றும் வெங்கட் பிரபுவின் அடுத்த படங்கள், என வரிசையாக பல கவர்ச்சிகரமான ப்ராஜெக்ட்டுகளை தன வசப்படுத்தியுள்ளார் சிம்பு. 

இதில் முக்கியமாக வெங்கட் பிரபுவின் படத்தின் மீது அனைவரது பார்வையும் விழுந்துள்ளது. காமெடி, த்ரில்லர், ஹாரர், ஆக்ஷன் என பல ஜானர்களில் ஹிட்டடித்துக் காட்டியுள்ள வெங்கட் பிரபு, இந்த முறை எந்த பக்கம் திரும்புவார் என சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படத்தை பற்றிய விவரங்கள் பெரிதாக வெளிவராத நிலையில், தற்போது படத்தின் பெயர் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. படத்திற்கு, 'சிம்புவின் அதிரடி. வெங்கட் பிரபுவின் ஆக்ஷன்' என பெயர் வைக்க முடிவெடுத்துள்ளார்களாம்.

"டைட்டிலிலேயே பயங்கர அட்ராசிட்டி செய்துள்ள இந்த கூட்டணி, படத்தில் என்னென்ன செய்யப் போகிறதோ?" என இப்போதே கோடம்பாக்கத்திலும் பேச்சுக்கள் எழுந்துள்ளன. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close