செப்டம்பரில் சீமராஜா: விநாயகர் சதுர்த்திக்கு வருகிறது!

  Bala   | Last Modified : 02 Jul, 2018 02:19 pm

seema-raja-release-date-announced

சிவகார்த்திகேயனின் ’சீமராஜா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’ரஜினி முருகன்’ படங்களின் ஹிட்டைத் தொடர்ந்து நாயகன் சிவகார்த்திகேயன், காமெடியன் சூரி, இயக்குநர் பொன்ராம் மூவரும்,  ’சீம ராஜா’வுக்காக மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்திருக்கின்றனர். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோ நிறுவனம்  படத்தை தயாரிக்கிறது.’சீம ராஜா’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் வேலைகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது!   

இந்நிலையில், ’சீம ராஜா’வின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சர்துர்த்தி அன்று படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக 24 ஏ.எம்.ஸ்டூடியோ நிறுவனம், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 13ம் தேதி வருகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close