துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் சூர்யா மகள்!

  திஷா   | Last Modified : 02 Jul, 2018 09:00 pm

suriya-s-daughter-to-romance-dhruv-vikram

கடந்த வருடம் தெலுங்கில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தப் படம் 'அர்ஜுன் ரெட்டி'. நவீன காலத்து 'தேவதாஸ்' படமாக கொண்டாடப் பட்ட அதில் ஹீரோவாக விஜய் தேவரகொன்டாவும், ஹீரோயினாக ஷாலினி பாண்டேவும் நடித்திருந்தார்கள். 

பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் ஆன இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் இயக்குநர் பாலா. இதில் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார். படத்திற்கு வர்மா எனப் பெயரிடப் பட்டுள்ளது. ஷாலினி பேண்டே கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என ஹீரோயினை தேடிய படக்குழுவினர் ஒருவழியாக டாஸ்கை முடித்திருக்கிறார்கள். 

படத்தில் துருவ் ஜோடியாக ஷ்ரியா ஷர்மா நடிக்கிறாராம். இவர் ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யா - ஜோதிகாவின் மகளாக நடித்து புகழ் பெற்றவர். தவிர ரஜினி - ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த எந்திரன், கெளதம் மேனனின் நீ தானே என் பொன் வசந்தம் ஆகியப் படங்களிலும் நடித்திருக்கிறார். ஸோ, வர்மா படத்தில் ஹீரோயின் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறாராம் இயக்குநர் பாலா. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close