வெளியானது ’நாடோடிகள் 2’ ஜஸ்ட் லுக்! சசிகுமார் ’பன்ச்’!

  Bala   | Last Modified : 02 Jul, 2018 06:19 pm

nadotigal-2-just-look-poster-surya-is-released-today

சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார் நடித்திருக்கும்  ’நாடோடிகள் 2’ படத்தின் ஜஸ்ட் லுக் ( வெல்வோமே..) டீசரை, நடிகர் சூர்யா சற்று நேரத்துக்கு முன் வெளியிட்டார்.

’சுப்ரமணியபுரம்’ படம் சூப்பர் ஹிட்டானதும், அந்த சூடு குறைவதற்குள் சசிகுமாரை தனி ஹீரோவாகப் போட்டு ‘நாடோடிகள்’ படத்தை ஆரம்பித்தார், இயக்குநர் சமுத்திரக்கனி. அந்தப் படமும் ஹிட் அடித்தது. இதையடுத்து இப்போது சசிகுமாரும், இயக்குநர் சமுத்திரக்கனியும் சேர்ந்து ’நாடோடிகள் 2’ படத்தை உருவாக்கியுள்ளனர். 

’நாடோடிகள் 2’ படத்தில், சசிகுமார் ஜோடியாக அஞ்சலி நடித்திருக்கிறார். தங்கையாக அதுல்யா நடித்திருக்கிறார். மேலும் பரணி, நமோ நாராயணன், எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் விரைவில் நடக்க உள்ளது.

இந்நிலையில், ’நாடோடிகள் 2’ படத்தின் ஜஸ்ட் லுக் ( வெல்வோமே..) டீசரை நடிகர் சூர்யா, ஜூலை 2-ந் தேதி வெளியிடப் போவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி, ’நாடோடிகள் 2’ படத்தின் ஜஸ்ட் லுக் டீசரை, நடிகர் சூர்யா சற்று நேரத்துக்கு முன் வெளியிட்டார். சில செகண்டே ஓடும் இந்த டீசரில் ”ஏய்.. நீங்கெல்லாம் எனக்கு வேணும்ணு கேட்கறவங்க..! நான், நமக்கு வேணும்னு கேட்கறவன்..!” என ’பன்ச்’ பேசி முடிக்க, ’வெல்வோமே..’ பாடல் ஒலிக்கிறது!  இந்த டீசர் வெளியான சில மணித்துளிகளில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close