என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாகும் சரத்குமார்!  

  பால பாரதி   | Last Modified : 02 Jul, 2018 02:33 pm

sarath-kumar-is-the-encounter-specialist

'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' என்கிற படத்தில் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் சரத்குமார்.

அரசியலில் இறங்கிய பிறகு நடிப்புக்கு கொஞ்சம் இடைவெளி விட்டிருந்த சரத்குமார், மீண்டும் சினிமாவில் பிஸியாகி உள்ளார். ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் ’பாம்பன்’ என்கிற படத்தில் நடித்து வரும் அவர், இப்போது 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' என்கிற புதிய படத்தில் நடிக்கிறார். வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வரும் இளைஞர்களால் பல இடங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் ஏற்படும் கலாச்சார சீர்குலைவைப் பற்றி சொல்லும்  இந்தப் படத்தில் சரத்குமார், என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

இதில் சரத்குமாருக்கு ஜோடியாக வரும் இனியா, மனித உரிமை கழக அதிகாரியாக நடிக்கிறார். புதுமுகங்கள் அர்வி, நீரஜா இளம் ஜோடிகளாக நடிக்கின்றனர். மேலும் இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்றுள்ளனர். வி.ஆர்.மூவிஸ் சார்பாக டி.ராஜேஸ்வரி தயாரிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' படத்தை எஸ்.டி.வேந்தன் இயக்குகிறார். இவர், ஷாம்-சினேகா நடித்த ’இன்பா’ மற்றும் ’மயங்கினேன் தயங்கினேன்’ ஆகிய படங்களை இயக்கியவர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close