தேசிய விருது வென்ற 'ஓவியா' பட இசை அமைப்பாளர்!

  Bala   | Last Modified : 02 Jul, 2018 03:18 pm

national-award-for-oviya-song

'ஓவியா' என்கிற படத்தில் இடம் பெற்ற 'அள்ளிக்கொள்ளவா' எனும் பாடலுக்காக இசையமைப்பாளர் சிவா பத்மஜன், இலங்கை அரசின் 'சிறந்த இசையமைப்பாளர்' விருதை பெற்றுள்ளார்.

’பிக்பாஸ்’ வீட்டிற்குப் போய் வந்த பிறகு ஓவியா பெயரை படத் தலைப்பாக வைக்கும் அளவுக்கு சினிமா உலகத்தில் ஓவியா அலை வீசுகிறது! ஓவியா நடித்திருந்த ’சீனி’ என்கிற படத்தின் தலைப்பை ’ஓவியாவ விட்டா யாரு?’ என மாற்றினார்கள். இந்நிலையில், ’ஓவியா’ என்கிற பெயரிலேயே ஒரு திரைப்படம் தயாராகியுள்ளது! இதில், புதுமுகம் காண்டீபன் ஹீரோவாக நடிக்க, இலங்கையை சேர்ந்த மிதுனா நாயகியாக நடித்திருக்கிறார். இதில் ஓவியாவாக சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் நடித்துள்ளார்.

இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் காண்டீபன் ரங்கநாதன் தயாரிக்கும் ‘ஓவியா’ படத்தை அறிமுக இயக்குநர் கஜன் சண்முகநாதன் இயக்கியிருக்கிறார். சிவா பத்மஜன் இசையமைத்திருக்கிறார். திரைக்கு வரத் தயாராக இருக்கும் இந்தப் படத்தில், 'அள்ளிக்கொள்ளவா' எனும் பாடல் இடம் பெறுகிறது. விஜய் டி.வி-யின் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் ஆனந்த் அரவிந்தக்‌ஷன் இந்த பாடலை பாடியுள்ளார்.

இந்தப் பாடலுக்காக இசையமைப்பாளர் சிவா பத்மஜனுக்கு, இலங்கை அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் கலைத்துறை அமைச்சர் எஸ்.பி.நவய்நெ (S.B.Nawwine), இசையமைப்பாளர்  சிவா பத்மஜனுக்கு இந்த விருதை வழங்கினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close