விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் ரோல் என்ன தெரியுமா?

  திஷா   | Last Modified : 03 Jul, 2018 01:44 am

nayan-s-role-in-viswasam

வீரம், வேதாளம், விவேகம் ஆகியப் படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சிவா - நடிகர் அஜித் மீண்டும் இணைந்திருக்கும் படம் விஸ்வாசம். இது அஜித்தின் 58 - வது படம். இந்தப் படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

பில்லா, ஆரம்பம் ஆகியப் படங்களைத் தொடர்ந்து இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், விவேக், கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

படத்தை தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 30-ஆம் தேதி முதல் துவங்கிய படத்தின் 2 -ஆம் கட்ட படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது. தற்போது, படத்தைப் பற்றிய அப்டேட் என்னவென்றால், இதில் நயன்தாரா டாக்டராக நடிக்கிறாராம். தவிர, நாளை முதல் இதன் பட பிடிப்பில் கலந்துக் கொள்ள இருக்கிறாராம் நயன். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close