சர்வர் சுந்தரம் ரிலீஸ் இப்போதைக்கு இல்லை: சங்கடத்தில் சந்தானம்!

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2018 05:18 pm

sarvar-sundaram-movie-again-postponed

சந்தானம்  ஹீரோவாக நடித்திருக்கும் ’சர்வர் சுந்தரம்’ படம் இந்த வாரம் வெளியாகாது என்று படத்தின் இயக்குநர் அறிவித்துள்ளார். இதனால், படத்தின் நாயகன் சந்தானம் சங்கடத்தில் இருக்கிறாராம். 

காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறிய சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள படம் சர்வர் சுந்தரம். இதில், சந்தானத்தின் ஜோடியாக வைபவி ஷாண்டில்யா நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.  ’திருடன் போலீஸ்‘, ’ஒரு நாள் கூத்து’, ’புரூஸ்லீ’ போன்ற படங்களைத் தயாரித்த 'கெனன்யா பிலிம்ஸ்' செல்வகுமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படம் கடந்த ஆண்டே ரிலீஸ் ஆக வேண்டியது! ஆனால், தயாரிப்பாளர் செல்வகுமார் வாங்கிய கடன் காரணமாகப் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் இருந்தது.  

ஒருவழியாக சிக்கல் எல்லாம் தீர்ந்து ’சர்வர் சுந்தரம்’ படம்  வருகிற 6ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வந்தன. இந்நிலையில், ’சர்வர் சுந்தரம்’ படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறது. ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று படத்தின் இயக்குநர் ட்வீட் செய்துள்ளார். பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும், படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போவதால் மிகுந்த மன சங்கடத்தில் இருக்கிறாராம் சந்தானம்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close