வெங்கட்பிரபுவுக்காக சிம்பு செய்த ’அதிரடி’ சலுகை!

  Bala   | Last Modified : 03 Jul, 2018 01:44 am

simbu-s-offer-for-venkat-prabhu

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்க இருக்கும் சிம்பு, அவருக்காக தனது சமபளத்தைப் பாதியாகக் குறைத்து ’அதிரடி’ சலுகை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத் தோல்வியால் துவண்டுபோயிருந்த சிம்புவுக்கு, மணிரத்னத்தின் ’செக்க சிவந்த வானம்’ படம் ஒப்பந்தமானதும் ஏறுமுகம் தான்! ’செக்க சிவந்த வானம்’ படத்தில் தனது போர்ஷனை முடித்திருக்கும் சிம்பு, தற்போது வெங்கட் பிரபுவுடன் கை கோர்த்திருக்கிறார். இதுதவிர, ’துருவங்கள் 16’ புகழ் இயக்குநர் கார்த்திக் நரேனின் அடுத்த படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.  

இதில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் படத்துக்கு ’அதிரடி’ என்கிற டைட்டிலை உறுதி செய்துள்ளனர். படத்துக்கு ’அதிரடி’ என பெயர் வைத்திருப்பதாலோ என்னவோ இந்தப் படத்துக்காக தனது சம்பளத்தைப் பாதியாக குறைத்து ’அதிரடி’ சலுகை செய்ய முன்வந்திருக்கிறாராம் சிம்பு!

மணிரத்னத்தின் ’செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடிப்பதற்கு சிம்பு, ரூ.10 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது! ஆனால், வெங்கட் பிரபுவுக்காக, அதனை பாதியாக குறைத்து ’அதிரடி’ சலுகை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது! 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close