வைரலாகும் சிம்புவின் புகைப்படம்!

  Bala   | Last Modified : 03 Jul, 2018 01:45 am

simbhu-looking-good-in-traditional-dress

நடிகர் சிம்பு பட்டுவேட்டி - சட்டையில் இருக்கும் புகைப்படமொன்று சமூக வலைதளங்களில் வைரலாக மாறி வருகிறது!

றெக்கை இல்லாமலே ஜிவ்வென்று பறக்க ஆரம்பித்திருக்கிறார் சிம்பு! மணிரத்னத்தின் ’செக்க சிவந்த வானம்’ படத்தை முடித்துக் கொடுத்த கையோடு வெங்கட் பிரபு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதற்கிடையே, கார்த்திக் நரேன் படமும் அவரின் வசம் உள்ளது!

என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும், நட்புக்கு மரியாதை கொடுத்து, நண்பர்களின் குடும்ப விழாக்களில் தவறாமல் ஆஜராகிவிடுவார். சிம்புவின் நண்பர் சர்புதின் என்பவருக்கு, இன்று காலை திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவுக்கு தமிழ் கலாச்சாரத்தின்படி பட்டு வேட்டி - சட்டை அணிந்து வந்து மணமக்களை வாழ்த்தினார் சிம்பு! 

நடிகர் சிம்பு, பட்டு வேட்டி - சட்டையில் இருக்கும் அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக மாறி வருகிறது!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close