அசத்திய அஜித்... நெகிழ்ந்த நயன்தாரா..!  

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2018 01:45 am

ajith-has-taken-photograph-of-nayanthara

'விசுவாசம்' ஷூட்டிங்கில் நயன்தாராவை புகைப்படம் எடுத்து அதை ஆல்பமாக்கி கொடுத்து அஜித் அசத்த, அதைப் பார்த்து நெகிழ்ந்தார் நயன்தாரா! 

‘பில்லா’, ’ஏகன்’,  ’ஆரம்பம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது,  ’விசுவாசம்’ படத்தில் நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்திருக்கிறார் நயன்தாரா. இதில் நயன்தரா, டாக்டராக நடிப்பதாக கூறப்படுகிறது.மேலும் தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு இமான் இசையமைக்க, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க, சிவா இயக்கி வருகிறார்.’விசுவாசம்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்து, தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த முதல் கட்டப் படப்பிடிப்பின் போது  அஜித், நயன்தாராவை ஸ்பெஷலாக ஸ்டில்ஸ் எடுத்திருக்கிறார். தான் எடுத்த புகைப்படங்களை ஒரு ஆல்பமாக உருவாக்கி நயன்தாராவிடம் கொடுத்து அசத்தியிருக்கிறார் அஜித்! அவர் எடுத்த அந்த அழகான புகைப்படங்களைப் பார்த்து நெகிழ்ந்து போனாராம் நயன்தாரா!

புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள அஜித்,’வீரம்’ படத்தின் போது தன்னுடன் நடித்த அப்புக்குட்டியை ஒரு போட்டோ செஷன் எடுத்து அசத்தியிருக்கிறார் எனபது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close