பாட்டிலும் ரெடி.. ’பார்ட்டி’யும் ரெடி..! வைரலாகும் சூர்யா - கார்த்தி பாடல் வீடியோ!

  Bala   | Last Modified : 03 Jul, 2018 05:34 pm

surya-karthi-s-party-song-by-vairal

வெங்கட் பிரபுவின் ’பார்ட்டி’படத்தில், சூர்யா - கார்த்தி இருவரும் இணைந்து பாடியிருக்கும் ’ச்சா ச்சா சாரே...’என்கிற பாடல் வீடியோ இப்போது, வைரலாக மாறி வருகிறது! 

இயக்குநர் வெங்கட் பிரபு, ஜெய், பிரேம்ஜி ஆகியோர் அடங்கிய ’கேங்’கை, ’பார்ட்டி’ பண்ணும் கேங்! என சினிமா வட்டார்த்தில் சொல்வதுண்டு! அதை மெய்பிக்கும் விதத்தில் வெங்கட் பிரபு, ஜெய் மற்றும் பிரேம்ஜி ஆகியோர் சேர்ந்து ’பார்ட்டி’ என்கிற படத்தை உருவாக்கியுள்ளனர். இதில் ஜெய் ஹீரோவாக நடிக்க, பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார். மேலும் இந்தப் படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஷாம், சிவா, ’கயல்’ சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கேசன்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார். 

’பார்ட்டி’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடக்கிறது. இந்தப் படத்தில், நடிகர்கள் சூர்யா - கார்த்தி இருவரும் இணைந்து ‘ச்சா ச்சா சாரே...’ என்கிற ஓப்பனிக் சாங்கை பாடியிருக்கின்றனர். அவர்களோடு சேர்ந்து வெங்கட் பிரபு, பிரேம்ஜி, கரீஷ்மா ஆகியோரும் குரல் கொடுத்திருக்கிறார்கள். பாட்டிலும் ரெடி.. ’பார்ட்டி’யும் ரெடி! என சொல்லமல் சொல்லும் விதமாக பெரிய மது பாட்டிலில் பாடலின் முதல் வரியைப் போட்டு விளம்பரப்படுத்தியிருந்தனர்.

 

இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோவை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு ஜாலி மூடில் ‘பார்ட்டி’ கொண்டாடும் வகையில் உள்ள இந்தப் பாடல் வீடியோ இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறியுள்ளது. ஆகவே, பாட்டில் ரெடியாகி விட்டது! அடுத்து, ’பார்ட்டி’க்கு ரெடியாகி வருகின்றனர் படக்குழுவினர்.  

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close