'லக்‌ஷ்மி' படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி!  

  பால பாரதி   | Last Modified : 03 Jul, 2018 04:19 pm

lakshmi-movie-audio-release-date

பிரபுதேவாவின் ‘லக்ஷ்மி’ படத்தின் ஆடியோ வெளியீடு ஜூலை 5-ந்தேதி நடைபெற உள்ளதாக படக்குழுவினர்  அறிவித்துள்ளனர். 

படம் இயக்குவதை கொஞ்சம் ஒத்தி வைத்துவிட்டு நடிப்பில் பிஸியாகியிருக்கும் பிரபு தேவா ’தேவி’ படத்தையடுத்து, இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் ‘லக்ஷ்மி’ படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளார்! இதில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். ’நடனப் புயல்’ பிரபு தேவாவின் நடனத் திறமையை நம்பி, இந்தப் படத்தில் நடனத்தை மையமாக வைத்து கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.

ஆகவே, பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மொத்தம் 12 பாடல்களை வைத்திருக்கிறார்கள்! அத்தனைக்கும் சூப்பர் ஹிட் மெட்டுக்களை போட்டுக் கொடுத்திருக்கிறாராம் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்!  ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் பிரமோத் ஃபிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. 

சமீபத்தில், வெளியிடப்பட்ட டீசர்கள் மற்றும் ’மொராக்கா…’, ’ஆலா..ஆலா..’ போன்ற 2 சிங்கிள் ட்ராக்குகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில்,’லக்ஷ்மி’ படத்தின் மூன்றாவது சிங்கிள் இன்று மாலை வெளியாகிறது. மீதமுள்ள பாடல்களை, நாளை மறுநாள் (5-ந்தேதி) நடைபெற உள்ள ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டில் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close