பாலா படத்தில் குத்தாட்டம் போடும் ’பிக்பாஸ்’ நடிகை!

  Bala   | Last Modified : 03 Jul, 2018 05:33 pm
bigg-boss-raiza-wilson-join-with-director-bala

’பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமான ரைசா, இயக்குநர் பாலாவின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பெங்களூரூ மாடலான ரைசா, ’பிக் பாஸ் சீசன் 1’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.’பிக்பாஸ்’ மூலமாக கிடைத்த புகழால் ரைசாவுக்கு சினிமா சான்ஸ் கிடைத்தது. ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் சக போட்டியாளராக இருந்த ஹரிஸ் கல்யாண் ஜோடியாக ’பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்து வருகிறார் ரைசா. இப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் பாலாவின் ‘வர்மா’ படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட ஒப்பந்தமாகியிருக்கிறாராம் ரைசா! தெலுங்கில் ஹிட் அடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ’வர்மா’வில், நடிகர் விக்ரம் மகன் துருவா ஹீரோவாக அறிமுகமாகிறார். இதில் ஏற்கனவே, ‘காலா’ நடிகை ஈஸ்வரிராவ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க்கிறார். இந்நிலையில், ’பிக் பாஸ்’ புகழ் ரைசாவும் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.   

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close