'லக்‌ஷ்மி' படத்தின் 3வது சிங்கிள் வெளியானது!

  Bala   | Last Modified : 03 Jul, 2018 05:35 pm
lakshmi-movie-3rd-single-release

‘லக்ஷ்மி’ படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு சிங்கிள் வெளியான நிலையில், தற்போது, ’பப்பர பப்பா..’ என்கிற 3- வது சிங்கிளையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

’தேவி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபு தேவாவும், இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் ‘லக்ஷ்மி’ படத்துக்காக மீண்டும் கூட்டணி போட்டுள்ளனர்.  ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் பிரமோத் ஃபிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. 

இந்தப் படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார். நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ், மொத்தம் 12 சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்.

சமீபத்தில்,இந்தப் படத்தின் 2 டீசர்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதையடுத்து,’மொராக்கா…’, ’ஆலா..ஆலா..’ என 2 சிங்கிள் ட்ராக்குகளை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகபடுத்தினர். இந்நிலையில்,’லக்ஷ்மி’ படத்தின் ’பப்பர பப்பா..’ என்கிற 3- வது சிங்கிளையும் படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close