இந்தியன்-2 படத்தில் அஜய் தேவகன்

  Newstm News Desk   | Last Modified : 04 Jul, 2018 08:16 pm

shankar-proposes-ajay-devgan-for-indian-2

கமல் நடிப்பில் உருவாக இருக்கும் இந்தியன்-2 படத்தில் அஜய் தேவ்கனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் 2 திரைக்கு வர தயாராக உள்ளது. இதனையடுத்து அவர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடிக்கயிருக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா அவருடன் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில் இதில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை நடிக்க வைக்க சங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் பாலிவுட் நடிகர் ஒருவர் இருந்தால் இந்தி மார்க்கெட்டிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதாலும் இந்த முயற்சியில் படக்குழு இறங்கி இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. 

முன்னதாக சங்கர் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர இருக்கும் எந்திரன் 2.0 படத்திலும் பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close