நின்று போன விஜய் படத்தை தூசு தட்டும் இயக்குநர்!?

  திஷா   | Last Modified : 04 Jul, 2018 03:21 pm

gautham-menon-talks-about-yohan-with-vijay

இயக்குநர் கெளதம் மேனன் தற்போது விக்ரமை வைத்து 'துருவ நட்சத்திரம்', த்னுஷை வைத்து 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகியப் படங்களை இயக்கி வருகிறார். இவர் சமீபத்தில் நடந்த ஒரு நேர்க்காணலில் விஜய்யை வைத்து அவர் இயக்குவதாக இருந்த 'யோஹன் அத்தியாயன் ஒன்று' படத்தைப் பற்றி மனம் திறந்திருக்கிறார். அந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு வந்ததுமே ரசிகர்களிடம் ஒருவித எதிர்ப்பார்ப்பு உருவாகியிருந்தது. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அந்தப் படம் 'டிராப்' ஆனாது. இதனால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

தற்போது இதைப் பற்றி, 'நான் விஜய்யிடம் 75 சதவீத கதையை மட்டுமே சொல்லியிருந்தேன். முழு கதையையும் சொல்லவில்லை. முழு கதையையும் தயார் செய்து விட்டு வந்து என்னை அணுகுங்கள் என விஜய் கூறியிருந்தார். ஆனால் அதன் பிறகு அவரிடம் அந்தப் படத்தைப் பற்றி பேச முடியவில்லை. ஆனால் நிச்சயம் அந்த புராஜெக்ட்டை படமாக்கும் எண்ணத்தில் தான் இருக்கிறேன்' எனக் கூறியிருக்கிறார் கெளதம் மேனன். 

இதனால் மீண்டும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை அதிகப்படுத்தியிருக்கிறார் கௌதம். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close