பாகுபலியை விட பிரம்மாண்டமாய்... விஜய்யை இயக்கும் சசிகுமார்?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 04 Jul, 2018 03:21 pm
sasikumar-direction-to-vijay-film

சசிகுமார் இயக்கி, நடித்த சுப்ரமணியபுரம் படத்திற்கு இது 10வது ஆண்டு. தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த படங்களின் பட்டியலில் சுப்ரமணியபுரம் முக்கிய இடத்தை பிடித்துவிட்டது. 

சசிகுமார் நடிப்பில் அசுரவதம் சமீபத்தில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கெனவே, சசிகுமார் நடிகர் விஜய்யை இயக்கவுள்ளதாகவும், இதற்காக அவரிடம் கதை சொல்லி காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், விஜய்யை இயக்குவது குறித்து முதன் முறையாக மெளனம் கலைத்து இருக்கிறார் சசிகுமார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ’’விஜய்யிடம் சென்று ஒரு கதையை சொன்னேன். ’நீங்க அடுத்து பண்ணினா இந்தக் கதையைத்தான் பண்ணனும்னு யோசித்து வைச்சிருப்பீங்களே. அந்தக் கதையை சொல்லுங்க’னு கேட்டார். அது வரலாற்றுக்கதைனு சொன்னேன். அந்தக் கதையை ஒரு சூப்பர் ஹீரோ நடித்தால் தான் அந்த பவர் தெரியும் என முழுக்கதையையும் அவரிடம் சொன்னேன். அந்தக் கதை அவருக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. யார் தன்னுடன் நடிக்க இருக்கிறார்கள் என்பதை எல்லாம் என்னிடம் கேட்கவில்லை. அந்தக் கதைக்காக ஹைதராபாத் சென்று லோக்கேஷன் எல்லாம் பார்த்து விட்டோம்.  இந்தப்படத்துக்கு முன்னால் 2 படம் பண்ணிட்டு வந்துடுறேன்னு விஜய் சொன்னார். புலி படம் வெளியானவுடன் இன்னும் கொஞ்சம் பொறுத்திருங்கனு சொன்னார். ’உங்களுக்கு எப்போது பண்ணலாம்னு தோணுதோ அப்ப பண்ணலாம். வெயிட் பண்றேன். நீங்க பிடிச்சிருக்குனு சொன்னதே போதும். அதுவே பெரிய விஷயம்’னு சொன்னேன்.

தயாரிப்பாளர் எல்லாம் முடிவு செய்தாயிற்று. அதற்கு பிறகு அந்தக்கதை பல்வேறு காரணங்களால் தாமதமானது. அடுத்து பாகுபலி வெளியானது. அந்தப்படத்தை பார்க்கும்போது வெங்கடேசன், நான், கதிர் எல்லோரும் ரொம்பவே பீல் பண்ணினோம். இந்த மாதிரி ஒரு கதையை தானே தமிழுக்கு கொண்டு வரணும்னு நினைச்சோம். அது முடியாமல் போச்சேனு வருந்தினோம். இப்போதும் அந்தக் கதையை மெருகேற்றிக் கொண்டேதான் இருக்கிறோம். எங்கே, எப்போது ஷூட்டிங், ஷூட்டிங் ஷெட்டியூல்டு எல்லாம் தயாராகவே வைத்திருக்கிறேன். அதற்கான நேரம் கிடைக்கும்போது விஜய்யை வைத்து அந்தப்படத்தை இயக்குவேன்’’ என்கிறார் சசிகுமார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close