மார்கெட் பிடிக்க கிளாமரில் இறங்கும் கேத்ரின் தெரசா: புகைபடம் உள்ளே..!

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2018 09:32 pm

catherine-tresa-landing-in-glamour

நடிகை கேத்ரின் தெரசா, சினிமாவில் மார்க்கெட் பிடிப்பதற்காக கிளாமர் கோதாவில் குதிக்க முடிவு செய்திருக்கிறார்.

ஐதராபத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கேத்ரின் தெரசா. இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துவிட்டு ’மெட்ராஸ்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.  
பா.ரஞ்சித் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வந்த ’மெட்ராஸ்’ படத்தில் குடிசைப் பகுதியில் வசிக்கும் மீனவப் பெண் கதாப்பாத்திரம் ஏற்றிருந்த கேத்ரின் தெரசா, ”இன்னா..., என்னெக் கட்டிக்கிறியா..?”என நாயகன் கார்த்தியைப் பார்த்து தெனாவெட்டாகக் கேட்கும் துணிச்சல்காரப் பெண்ணாக தோன்றி, ரசிகர்களின் மனதிற்குள் நுழைந்தார்!

முதல் படத்திலேயே தனது நடிப்பு முத்திரையைப் பதித்திருந்தாலும் கேத்ரின் தெரசாவுக்கு பட வாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லை! அதர்வாவுடன் ’கணிதன்’, ஆர்யாவுடன் ’கடம்பன்’ என அங்கொன்றும் இங்கொன்றுமாக சினிமாவில் அவருக்கு மந்தமான சூழ்நிலையே நிலவுகிறது! 

இந்நிலையில், சித்தார்த்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி யிருக்கிறார் கேத்ரின் தெரசா. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடந்தது. இன்னும் டைட்டில் முடிவாகாத இந்தப் படத்துக்கு ’புரொடக்‌ஷன் நம்பர் 2’ என்கிற பெயரில் படத்துக்கு பூஜை போட்டிருக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்தப் படம் தனக்கு கை கொடுக்கும் என நம்பிக் கொண்டிருக்கும் கேத்ரின் தெரசா, சினிமாவில் மார்க்கெட் பிடிக்க தன்னிடம் உள்ள ஒரே ஆயுதம் ’கிளாமர்’ தான் என முடிவு செய்து, கிளாமர் கோதாவில் குதிக்கப்  போகிறாராம்! இதை உறுதி செய்யும் விதத்தில் அவர், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்டிருக்கிறார். அதைப் பார்த்துப் பரவசப்பட்ட ரசிகர்கள், சினிமாவில் கேத்ரின் தெரசாவின் கிளாமர் தரிசனத்துக்காக காத்திருக்கிறார்கள்.  
        

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close