கமல் வலைவீசிப் பிடித்த பாடகர்!

  Bala   | Last Modified : 04 Jul, 2018 02:19 pm

viral-singer-rakesh-unni-met-kamalhaasan

சமூக வலைதளங்களில் வைரலான பாடலைப் பாடியவரை வலை வீசித் தேடிப் பிடித்து, அவருக்கு தனது படத்தில் வாய்ப்பை வழங்கியிருக்கிறார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்திருந்த ’விஸ்வரூபம்’ படத்தில் ’உன்னை இங்கு காணாத...’ என்கிற பிரபலமான பாடல் இடம் பெற்றிருக்கிறது! ஜிப்ரான் இசையில் உருவான இந்தப் பாடலை சங்கர் மகாதேவனும், கமல்ஹாசனும் இணைந்து பாடியிருந்தனர்.

இந்தப் பாடலை, அச்சரம் பிசகாமல் தனது குரலில் பாடிய ஒருவர், அதை சமீபத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது! இந்த பாடல் வீடியோ கமல்ஹாசனின் கவனத்துக்கு சென்றது. அதை பாடகர் சங்கர் மகாதேவனுக்கும் அனுப்பி வைத்தார்! இதையடுத்து, அந்த பாடகரை கமல்ஹாசன் தரப்பிலிருந்து வலை வீசித் தேடினர். 

இந்நிலையில், அந்தப் பாடலைப் பாடியது கேரளாவில் உள்ள ஆலப்புழாவைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளி ராகேஷ் உன்னி என்பது தெரிய வந்தது. உடனே, ராகேஷ் உன்னியை சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தமது அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்த கமல்ஹாசன், அவருக்கு தனது பாராட்டைத் தெரிவித்தார். அப்போது ராகேஷ் உன்னி, கமல் முன்னிலையில் அந்தப் பாடலை மீண்டும் பாடிக் காட்டவே, அதைக் கேட்டு பரவசமடைந்த கமல், தனது அடுத்த படத்தில் பாடும் வாய்ப்பை வழங்குவதாக உறுதியளித்தார்.
        

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close