பாலாவின் புது ஹீரோயின் இவர் தான்!

  திஷா   | Last Modified : 05 Jul, 2018 03:49 am

megha-chowdhury-a-kolkata-model-will-be-pairing-dhruv-vikram

சென்ற வருடம் தெலுங்கில் வெளியாகி சக்கைப் போடு போட்டப் படம் அர்ஜுன் ரெட்டி. இந்தக் கால தேவதாஸ் எப்படி இருப்பார் என்பதை நம்  கண் முன் காட்டிய அந்தப் படத்தை இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கியிருந்தார். அர்ஜுனின் காதலையும், போதையையும் அத்தனை தீவிரமாக அந்தப் படத்தில் காட்டியிருப்பார். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப் பட்ட அந்தப் படம் பெரும் வசூலை வாரிக் குவித்தது. 

இதனை தமிழில் இயக்குநர் பாலா ரீமேக் செய்து வருகிறார். படத்திற்கு 'வர்மா' எனப் பெயரிடப் பட்டுள்ளது. இதில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினுக்காக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தார் பாலா. ஜில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா ஜோதிகாவுக்கு மகளாக நடித்த ஷ்ரியா ஷர்மாவின் பெயரும் இதில் அடிப்பட்டது. 

தற்போது வர்மா படத்தின் ஹீரோயின் பற்றி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த மாடலிங் பெண் மேகா செளத்ரி இதில் ஹீரோயினாக அறிமுகமாகிறாராம். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close