சினிமாவுக்கு முழுக்குப் போட்டார் ’வெண்ணிற ஆடை’ மூர்த்தி!  

  Bala   | Last Modified : 05 Jul, 2018 03:50 am

comedy-actor-vennira-aadai-murthy-told-good-bye-to-cinema

பிரபல காமெடி நடிகர் ’வெண்ணிற ஆடை’ மூத்தி, சினிமாவுக்கு முழுக்குப் போட்டுள்ளார். 

அடுத்தவரை அழைக்கும் போது உதடுகளைக் குவித்து, ’பப்..பப்.., புர்..ர்..!’ என ஒரு டைப்பாக சமிக்கை செய்து, ’மம்ட்டி..’ என கண்ணடித்துக் கூப்பிடும் ’வெண்ணிற ஆடை’ மூர்த்தியை வெண்திரையில் பார்த்ததும் ’குபீர்’ சிரிப்பு குப்பளித்துக் கொண்டு வரும்! வக்கீல் தொழிலுக்குப் படித்த மூர்த்தி, கலை மீதுள்ள ஆர்வத்தால் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து, இயக்குநர் ஸ்ரீதரின் ’வெண்ணிற ஆடை’ படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானார்.1965-ல் வந்த ’வெண்ணிற ஆடை’ படத்தில் மூர்த்தியோடு சேர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், நிர்மலா ஆகியோரும் அறிமுகமானார்கள். அந்தப் படத்துக்குப் பிறகு மூர்த்திக்கும், நடிகை நிர்மலாவுக்கும் ’வெண்ணிற ஆடை’ என்கிற பெயர் நிலைத்துப் போனது.  

’’பப்..பப்.., புர்..ர்..! பாப்பா... ஒன்னப் பாத்தா எனக்கு பீறிட்டுக்கிட்டு வருது, சிரிப்பு...!’, என அவர், ஸ்டெயிட் மீனிங்கிலேயே பேசினாலும், அந்தக் காமெடிக்கு பெண்கள் பக்கம் இருந்தும் ’குபீர்’ சிரிப்பு வரும்! 
தனக்கென ஒரு தனி ’ரூட்’டைப் பிடித்துக் கொண்டு, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடியனாக மாறிய ’வெண்ணிற ஆடை’ மூர்த்தி, நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். தன்னுடன் நடித்த மணிமாலாவை காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இப்போது, முதுமையின் காரணமாக அவர் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுள்ளார்.       

இன்று, ’வெண்ணிறஆடை’ மூர்த்திக்கு 80-வது பிறந்த நாள். இந்த பிறந்த நாளை அவர் தனது மனைவி மணிமலாவுடன் எளிமையாக கொண்டாடினார். ’வெண்ணிற ஆடை’ மூர்த்தியுடன் பல படங்களில் நடித்திருக்கும் பழம்பெரும் நடிகை சச்சு, நேரில் சென்று தந்து வாழ்த்து தெரிவித்தார்.  
        

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close