’என்.டி.ஆர் பயோபிக்’ கதையில் வித்யாபாலன்!

  Bala   | Last Modified : 04 Jul, 2018 04:59 pm

vidya-balan-in-ntr-bio-pic-story

பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன், ’என்.டி.ஆர் பயோபிக்’ படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமா உலகில் தடம் பதிக்கிறார். 

பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன், தனது கவர்ச்சிகரமான நடிப்பால் இந்திப் பட உலகத்தை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார். சில்க் ஸ்மிதாவின் பயோபிக் கதையான ’டர்ட்டி ஃபிக்சர்ஸ்’ படத்தில், கிளாமரை தெறிக்க விட்டு ரசிகர்களை கிறங்க வைத்ததோடு, சிறப்பான நடிப்பையும் காட்டியதற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதன் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமானார் வித்யாபாலன்.

சில்க் ஸ்மிதாவின் பயோபிக் கதையில் நடித்திருக்கும் வித்யாபாலன், அடுத்து ’என்.டி.ஆர் பயோபிக்’ கதையில் நடிக்கப் போகிறார். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் முடிசூடா மன்னராகவும் இருந்த என்.டி.ஆர். என அழைக்கப்படும் என்.டி.ராமராவ், வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.’என்.டி.ஆர் பயோபிக்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா தனது தந்தை என்.டி.ஆர். வேடத்தில் நடிக்கிறார். இதில் என்.டி.ஆர் மனைவி பசவதாரகம் வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார். இயக்குநர் கிருஷ் இயக்கும் இந்தப் படத்தை பாலகிருஷ்ணா, சாய் கோரப் பட்டி, விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close