அரவிந்த்சாமியின் அடுத்த படம்!

  Bala   | Last Modified : 05 Jul, 2018 10:27 am

arvid-sami-s-next-movie

’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார் அரவிந்த்சாமி!

இயக்குநர் மணிரத்னத்தின் கண்டுபிடிப்பான அரவிந்த்சாமி, சினிமாவை விட்டு கொஞ்சம் காலம் ஒதுங்கியிருந்த போது, ’கடல்’ படம் வாயிலாக மீண்டும் மணிரத்னம் மூலமாகவே மறுவாழ்வு கிடைத்தது. பின் ’தனி ஒருவன்’ படத்தில் ஹீரோவுக்கு இணையான வில்லன் வேடம் கிடைத்தது.’தனி ஒருவன்’ வெற்றிக்குப் பிறகு, மீண்டும் ஹீரோவாக களத்தில் இறங்கியிருக்கும் அவர், இப்போது வந்திருக்கும் இளம் ஹீரோக்களுக்கு சவால் விடுமளவுக்கு இன்னும் இளமைத் துள்ளலோடு வலம் வருகிறார்.  அரவிந்த்சாமி ஹீரோவாக நடித்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து, ’சதுரங்க வேட்டை 2’  படம் வெளிவர உள்ளது.இப்போது, மணிரத்னத்தின் ’செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார்.  

இந்நிலையில், அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார் அர்விந்த்சாமி! அவரின் நடிப்புக்கு நல்ல தீனியாக இருக்கப்போகும் ஒரு கதையில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில், அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ‘என்னமோ நடக்குது’ ’அச்சமின்றி’ ஆகிய படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்தப் படத்தை இயக்குகிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close