மீண்டு (ம்) வருகிறார் சேரன்!

  பால பாரதி   | Last Modified : 05 Jul, 2018 03:52 am

director-cheran-re-entry

நடிப்புக்கு கொஞ்சம் இடைவெளி விட்டிருந்த சேரன் மீண்டு(ம் ) வந்து, படம் இயக்கத் தயாராகி விட்டார். 

பாரதிராஜாவுக்குப் பிறகு கிராமியக் கதைகளை மண்மனம் மாறாமல் எடுப்பதில் கெட்டிக்காரரான இயக்குநர் சேரன், தமிழ் சினிமாவுக்கு மிக சிறந்த படைப்புக்களை கொடுத்திருக்கிறார். அவரின் இயக்கத்தில் வந்த, ’பாரதி கண்ணம்மா’, ’பொற்காலம்’, ’வெற்றிக்கொடி கட்டு’, ’ஆட்டோ கிஃராப்’ போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் கிளாசிக்கல் மூவியாக உள்ளன. 
வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்த சேரன், தங்கர்பச்சானின் இயக்கத்தில் ’சொல்ல மறந்த கதை’ படத்தில் ஹீரோவாக மாறினார். இதையடுத்து, நடிப்பில் பிஸியானதால் அவருக்கு, படம் இயக்க நேரம் கிடைக்கவில்லை! கிடைத்த ’கேப்’பில் அவ்வப்போது படம் இயக்கினார். 

சேரன் கடைசியாக,’ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ என்கிற படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் சரியாகப் போகாததால், சினிமாவிலிருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை ஹீரோவாக போட்டு ஒரு படத்தை இயக்க தயாராகிவிட்டார் சேரன். வரும் ஜூலை 13-ந் படப்பிடைப்பு துவங்குகிறது. இந்த தகவலை சேரன் தனது முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.     

‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான உமாபதி, தற்போது அவரின் தந்தை தம்பி ராமையா இயக்கத்தில் ’மணியார் குடும்பம்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் திரைக்கு வரும் முன்பே சேரன் இயக்கத்தில் நடிக்கிறார் உமாபதி. 


 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close