முத்தையா முரளிதரன் வாழ்க்கையை படமாக்கும் வெங்கட் பிரபு

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2018 12:02 pm

is-venkat-prabhu-to-direct-muttiah-muralitharan-s-biopic

இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை வெங்கட் பிரபு திரைப்படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இயக்குநர் வெங்கட்பிரபு சிம்புவை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருப்பதை உறுதி செய்துள்ளார். அந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். திரைக்கதை உருவாக்க பணிகள் சென்று கொண்டிருக்கிறது. அது முடிந்த பின்னர் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், படத்தின் பெயர் முடிவு செய்யப்படும். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கப்படும் என்று கூறி இருக்கும் அவர், அடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

இதற்காக முத்தையா முரளிதரனை சந்தித்து பேசி இருப்பதாக தெரிகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கை நிறைய திருப்பங்கள் நிறைந்தது. அவர் பந்து வீசும் முறையை சந்தேகித்து சர்வதேச கிரிக்கெட் ஆணையம் நிறைய சோதனைகள் வைத்தது. அவற்றில் இருந்து மீண்டு வந்து பல உலக சாதனைகளை படைத்தார்.

கிரிக்கெட் மீது அதீத விருப்பம் காட்டும் வெங்கட் பிரபு கிரிக்கெட்டை மையப்படுத்தி சென்னை 600028, மற்றும் அந்த படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close