சூர்யாவுடன் இணைந்த ஆர்யா!

  திஷா   | Last Modified : 05 Jul, 2018 12:46 pm

arya-on-board-for-surya-s-next

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்குப் பிறகு செல்வராகவனின் ‘NGK’ மற்றும் கே.வி.ஆனந்த் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சூர்யா. இதில் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் சூர்யாவின் கரியரில் 37-வது படம். இதில் சூர்யா 4 வித்தியாசமான லுக்கில் நடிக்கிறார் என செய்திகள் வெளியாகியிருந்தன. 

சூர்யாவுக்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால், தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ், பாலிவுட் நடிகர் பொம்மன் இரானி, இயக்குநர் சமுத்திரக்கனி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள். தற்போது படத்தைப் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் ஆர்யா நடிக்கிறார். இதை படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

'எனக்கு மிகவும் பிடித்த, நான் மதிக்கும் சூர்யாவுடன் இணைந்ததில் மகிழ்ச்சி' என ஆர்யாவும் ட்வீட் செய்ய, 'நீங்கள் எங்களுடன் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, சீக்கிரம் 100 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டுவோம்' என அதற்கு ரீட்வீட் செய்திருக்கிறார் சூர்யா.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close