டிரைலருக்கு பதிலாக முழுபடத்தை யூடியூப்பில் பதிவேற்றிய சோனி!

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2018 05:43 pm

sony-uploaded-entire-movie-on-youtube-instead-of-trailer

யூடியூப்பில் டிரைலருக்கு பதிலாக சோனி நிறுவனம் தான் தயாரித்த காளி தி கில்லர் படத்தை முழுவதுமாக பதிவேற்றிய சம்பவம் நடந்துள்ளது. 

வழக்கமாக ஒரு படம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் போது அதற்கான தனி டிரெய்லரை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும். அந்த வகையில் சோனி நிறுவனம் தான் தயாரித்த ஆங்கில படமான காளி தி கில்லர் படத்தின் டிவிடி மற்றும் டிஜிட்டல் தள வெளியிட்டையொட்டி யூடியூப்பில் பிரத்யேக டிரைலரை வெளியிட இருந்தது. 

ஆனால் டிரைலருக்கு பதிலாக அந்த நிறுவனம் முழு படத்தையும் தவறுதலாக யூடியூப்பில் பதிவேற்றியது. கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கு அந்த படம் யூடியூப்பில் இருந்துள்ளது. அதன் பின் இதுகுறித்து செய்திகள் வர சோனி நிறுவனம் தனது தவறை உணர்ந்துள்ளது. பின் இந்த படத்தை நீக்கி விட்டு டிரைலரை பதிவேற்றம் செய்தது. தற்போது இந்த படம் டிஜிட்டல் தளத்தில் உள்ளது. 

2017 ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நாயகனாக, பனோரமால் ஆக்டிவிட்டி: தி மார்க்ட் ஒன், வாக் ஆஃப் ஷேம் உள்ளிட்ட படங்களில் நடித்த ரிச்சர்ட் காப்ரெல் நடித்துள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close