வெங்கட்பிரபு படத்தில் சிம்புவுக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ்!

  Bala   | Last Modified : 05 Jul, 2018 09:02 pm

keerthi-suresh-is-pairing-with-simbu-in-venkat-prabhu-movie

வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.    

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் தற்போது ’பார்ட்டி’ என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கும் வெங்கட் பிரபு, அடுத்ததாக சிம்புவை இயக்கப் போகிறார். ’அமைதிப் படை 2’ மற்றும் ’கங்காரு’ படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ‘அதிரடி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  

தற்போது கீர்த்தி சுரேஷ், விக்ரம் ஜோடியாக ‘சாமி 2’, விஷால் ஜோடியாக ‘சண்டக்கோழி 2’, விஜய் ஜோடியாக ‘சர்கார்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்,’அதிரடி’ படத்தில் சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க தயாரிப்பாளர் தரப்பிலிருந்து பேச்சு வார்த்தை நடக்கிறது.  

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close