’பயப்படாம அடி’ - புதுமுகத்தை ஊக்கப்படுத்திய விஜய் சேதுபதி!

  பால பாரதி   | Last Modified : 05 Jul, 2018 04:49 pm

vijay-sethupathi-who-encouraged-the-new-face

சண்டைக் காட்சியில் தன்னை அடிக்கத் தயங்கிய புதுமுக நடிகரை, ’பயப்படாம அடி..’ என ஊக்கப்படுத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி. 

கூட்டம் கும்பலில் வந்து ’ஒற்றை டயலாக்’ பேசி, இன்று முன்னணி ஹீரோவாக மாறியிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த உயரத்தை அவர் ஒரே நாளில் அடையவில்லை! போட்டியும், பொறாமையும் மலிந்துகிடக்கும் சினிமா உலகில் போராடி ஜெயித்திருக்கிறார். விஜய் சேதுபதி விஸ்வரூபம் எடுக்க அவரின் அர்ப்பணிப்பும் ஒரு காரணம்! தான் ஏற்றுக் கொண்ட கதாப்பாத்திரத்துக்கு உண்மையாக இருப்பவர் அவர்! அதற்கு, ’தர்மதுரை’ படத்திலிருந்து ஆதாரம் காட்டுகிறார் புதுமுக நடிகர் ரகு! 

ஜப்பானில் சாப்ட்வேர் இஞ்சினியராக இருந்த ரகு, சினிமா மீதுள்ள காதலால் அந்த வேலையை உதறிவிட்டு சென்னைக்கு வந்து, பாலுமகேந்திராவின் சினிமாப் பட்டறையில் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டு,’பூஜை’ படத்தில் விஷாலின் நண்பர்களில் ஒருவராக சிறு வேடத்தில் தலையைக் காட்டினார். பிறகு அவருக்கு, 'தர்மதுரை ' படத்தில் விஜய்சேதுபதியின் தம்பியாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

முதல் நாள் ஷூட்டிங்கிலேயே, விஜய்சேதுபதியின் சட்டையைப் பிடித்து சண்டை போடும் காட்சியாம்! அதனால், நடுக்கத்தில் இருந்தாராம் ரகு.  அவரின் பதட்டம் அறிந்த விஜய் சேதுபதி, ’பயப்படாம அடி..!’ என ஊக்கப்படுத்தினாராம். அதற்குப் பிறகு அந்தக் காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டது. விஜய் சேதுபதியை தாக்கும் அந்த வில்லத்தனம் தான் ரகுவை ரசிகர்களிடம் அடையளம் காட்டி இருக்கிறது! இப்போது, ’பரியேறும் பெருமாள்’, ’கடைக்குட்டி சிங்கம்’, ’சீம ராஜா’ போன்ற  படங்களில் நடித்து முடித்திருக்கிறார் ரகு.  

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close