புது வரவு : சோலோவாக வரும் 'மிஸ்டர் சந்திரமௌலி' ! 

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2018 10:54 am

new-movie-arrivals

இந்த வாரம் கெளதம் கார்த்திக்கின் 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்துடன், சமுத்திரக்கனி இயக்கத்தில் சரத்குமார் நடித்திருக்கும் ’வேலன் எட்டுத்திக்கும்’, காமெடி நடிகர் மயில்சாமியின் ’காசு மேல காசு’ மற்றும் புதுமுகங்களின் ’ரோஜா மாளிகை ‘ என நான்கு படங்கள் களம் இறங்குகின்றன! ஆனால், மல்லுக்கு நிற்க பெரிய ஹீரோக்கள் யாரும் இல்லாததால், 'மிஸ்டர் சந்திரமௌலி' திரைப்படத்துக்கு தான் ரசிகர்கள் ஆதரவு இருக்குமென  எதிர்பாக்கப்படுகிறது.

மிஸ்டர் சந்திரமௌலி: ஒரு காலத்தில் கதாநாயகனாக கலக்கிய நவரச நாயகன் கார்த்திக், அவரின் மகன் கெளதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்திருப்பதால் 'மிஸ்டர் சந்திரமௌலி' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி யிருக்கிறது. அப்பாவும், மகனும் சேர்ந்து அலப்பறை செய்திருக்கும் இந்தப் படத்தில் ரெஜினா, வரலட்சுமி இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். இதில் கிளாமருக்கு ரெஜினா, ஹோம்லிக்கு வரலட்சுமி என இருவருக்கும் ’தனி ட்ராக்’ போட்டுக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் திரு.

இந்தப் படத்தில் மகேந்திரன், அகத்தியன், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், சதிஷ், விஜி சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக் கின்றனர். இந்தப் படத்துக்கு சாம் சி எஸ் இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் எஸ்.சுரேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். இந்தப் படத்தை பாஃடா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரித்துள்ளார். 

வேலன் எட்டுத்திக்கும் : சமுத்திரக்கனி இயக்கம், சரத்குமார், ’நான் ஈ’ புகழ் நானி ஆகியோரின் நடிப்பு, ஜி.வி.பிரகாஷ் இசை என பெரும் தலைகள் இருந்தாலும், ’வேலன் எட்டுத்திக்கும்’ தெலுங்கிலிருந்து இறக்குமதியான மொழிமாற்றுப் படம் என்பதால் ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் மீது அவ்வளவாக ஈர்ப்பு இல்லை!  

காசு மேல காசு : காமெடி நடிகர் மயில்சாமி கதையின் நாயகனாக வலம் வரும் ’காசு மேல காசு’ படம் காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படம். இதில் கஞ்சா கருப்பு, கோவை சரளா, நளினி போன்றவர்களும் உள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பழனி இயக்கியிருக்கிறார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close