மீண்டும் பாகுபலி: கட்டப்பா - சிவகாமி கதையை எடுக்கிறார் ராஜமவுலி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 05 Jul, 2018 05:00 pm

again-making-3-parts-of-bhahubali-film

வசூலிலும், காட்சிகளின் பிரம்மாண்டத்திலும் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இந்திய சினிமாவை உலகமே உற்று நோக்கவைத்தன. 

பாகுபலி படத்தின் ஓவ்வொரு பாத்திரங்களும் தனித்துவம் வாய்ந்தவகையாக அமைக்கட்டிருந்தன. இந்நிலையில் பாகுபலி கதையை மீண்டும் கையிலெடுத்து இருக்கிறார் இயக்குநர் ராஜமவுலி. பொதுவாக ஹிட்டான படங்களின் தொடர்ச்சியான பாகத்தை எடுப்பதுதான் வழக்கம். ஆனால், ராஜமவுலி வித்தியாசமாக இந்தமுறை பாகுபலி படங்களின் முந்தைய பாகத்தை இயக்க உள்ளார்.

அதாவது ரம்யா கிருஷ்ணன்  நடித்த சிவகாமி, சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரங்களின் இளமை காலத்தையும், அவர்களுக்குள் இருந்த நம்பிக்கை, விசுவாசம், நட்பு ஆகியவற்றை கதையாக உருவாக்கி இருக்கிறார்களாம்.  இருபாகங்களுக்கும் கதை எழுதிய விஜேய்ந்திர பிரசாத் அடுத்த பாகங்களும் கதை எழுத இருக்கிறார். பல படங்களை இயக்கிய தேவ கட்டாவுடன் இணைந்து ராஜமவுலி இந்த படத்தை இயக்க உள்ளார். அதிலும், ஒரே பாகமாக இல்லாமல்  மூன்று பாகங்களாக உருவாக்கப்பட உள்ளது. இந்தப்படம் வெப் சீரீஸ் வடிவில் உருவாக்கப்பட்டு நெட்பிலிக்ஸில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குநர்களில் ஒருவரான தேவ கட்டா, ‘சிவகாமி பாத்திரத்தை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் இந்தப்படம் பாகுபலி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். இந்தப்படத்தில் இயக்குநர் ராஜமவுலியுடன் இணைந்து பணியாற்றுவது பெருமையாக உள்ளது’’ எனத் தெரிவித்தார். நடிகர், நடிகையர், படக்குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close