கமல் - விஜய் இணையும் ’சர்கார் மய்யம்’... நெருப்புடா.. நெருங்குடா..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 06 Jul, 2018 03:32 am

kamalhassan-joining-vijay-film

கமல்ஹாசனையும், விஜயையும் இணைத்து  நடிக்கவைத்து பிரம்மாண்ட படத்தை இயக்கும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளார்  இயக்குநர் அருண் ராஜா காமராஜ்.

இயக்குநர் அருண் ராஜா காமராஜ் ஓரிரு படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பராக அறியப்படுபவர். அடுத்து ரஜினி நடித்த கபாலி படத்தில் ’நெருப்புடா.. நெருங்குடா..’’ பாடலை சந்தோஷ் நாராயணன் இசையில் எழுதி பாடினார். இது அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித் தந்தது. அடுத்து பைரவா, தெறி ஆகிய படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார். பாடகர், பாடலாசிரியர், நடிகர் என அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுவந்த அவர், கனா என்னும் படத்தை இயக்கி வருகிறார். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இந்தப்படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்தப்படத்தை நட்புக்காக நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்நிலையில், விஜயையும், கமலையும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘விஜய் என்னுடன் நெருக்கமாக பழகக்கூடியவர். அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படும். அப்படி ஒரு சந்தர்ப்படத்தில் டபுள் ஹீரோ சப்ஜெக்டான இந்தப்படத்தின் ஒன்லைனை அவரிடம் கூறினேன்.  அவருக்கு பிடித்துப்போய் விட்டது. கதையை டெவலப் செய்யச் சொன்னார். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அவர் எனது நண்பர் என்பதால் இதில் நடிக்க வைத்து விடுவேன். ஆனால், கமலை இதுவரை நான் சந்தித்துப்பேசியதில்லை. அவரை விரைவில் சந்தித்து பேச இருக்கிறேன். அவருக்கும் இந்த திட்டம் பிடிக்கும் என நினைக்கிறேன். அப்படி நிகழ்ந்துவிட்டால் ப்டம் பிரம்மாண்டமாக உருவாகும்’’ என உறுதியாக நம்புகிறார் அருண் ராஜா காமராஜ்.

கமல் ஏற்கெனவே அரசியலில் இறங்கி கட்சியையும் சின்னத்தையும் அறிவித்து அடுத்த கட்டமாக தேர்தல் கூட்டணி அமைக்கும் பணிகளில் இறங்கியுள்ளார். விஜயும் விரைவில் அரசியலில் ஈடுபடப்போவதாக கூறப்படுகிறது. காலா ரிலீஸ் சமயத்தில் ரஜினி- விஜய் ரசிகரகளுக்கிடையே பிரச்னை உருவானது. அடுத்து விஜய் அரசியலுக்கு வருவதை பற்றி கமலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என கூறியிருந்தார் கமல். அதற்கு விஜய் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இருவரும் இணைந்து நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

 அரசியலில் ஈடுபடப்போகும் சூழலில் இருவரும் இணைந்து நடித்தால் ’சர்கார் மய்யம்’ எனப்பெயர் சூட்டுவார்களோ..?  

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close