இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் விஜய்!

  திஷா   | Last Modified : 06 Jul, 2018 03:36 am

al-vijay-is-getting-ready-for-his-2nd-marriage

தெய்வ திருமகள் படத்தில் நடித்த அமலாபாலும், படத்தை இயக்கிய விஜய்யும் காதலிக்கத் தொடங்கினர். பிறகு தான் இயக்கிய தலைவா படத்திலும் ஹீரோயினாக அமாலா பாலையே நடிக்க வைத்தார் விஜய். 

தங்களது காதலைப் பற்றி அதிகாரப் பூர்வமாக அறிவித்த இவர்கள் 2014-ல் திருமணமும் செய்துக் கொண்டனர். ஆனால் இரண்டு வருடத்திற்குள் கருத்து வேறுபாடு காரணமாக இவர்களது திருமண வாழ்க்கை பிரிந்தது. நம்பிக்கை, நேர்மை இல்லாமல் போனது தான் இதற்கு முக்கியக் காரணம் என இது பற்றி தெரிவித்தார் விஜய். 

அதன் பிறகு அமலா பால் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குநர் விஜய்யும் முன்பை விட வேகமாக அடுத்தடுத்து படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது பிரபு தேவாவை வைத்து லக்‌ஷ்மி என்ற படத்தை இயக்கி வருகிறார். 

இந்நிலையில், தற்போது இரண்டாவது திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறாராம் விஜய். அதனால் அவருக்கு தீவிரமாக பெண் தேடி வருகிறார்களாம், அவரது பெற்றோர். அநேகமாக லக்‌ஷ்மி படத்தின் ரிலீஸுக்குப் பின் அவரின் திருமணம் நடக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close