பார்வையற்றவராக நடிக்கும் வரலக்ஷ்மி!

  திஷா   | Last Modified : 06 Jul, 2018 03:36 am

varu-sarath-playing-a-blind-girl

நடிகை வரலக்‌ஷ்மி சரத் குமாரின் காட்டில் வாய்ப்பு மழை விடாமல் பெய்துக் கொண்டிருக்கிறது.  லக்‌ஷ்மி குறும்பட இயக்குநர் சர்ஜுனின் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, விமலுடன் ‘கன்னி ராசி’, வினய்யின் ‘அம்மாயி’, விஷாலின் ‘சண்டக்கோழி 2’, விஜய்யின் ‘சர்கார்’, ஜெய்யின் ‘நீயா 2’, சரத்குமாரின் ‘பாம்பன்’, மனோஜ்குமார் நடராஜனின் ‘வெல்வெட் நகரம்’ என அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. 

தவிர கெளதம் கார்த்திக்குடன் இவர் நடித்திருக்கும் மிஸ்டர் சந்திரமெளலி படம் நாளை வெளியாகிறது. 
இந்நிலையில் வரலக்ஷ்மியின் பட பட்டியலில் மற்றொரு புதிய படமும் இணைந்துள்ளது. அந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப் படவில்லை. JK என்பவர் இதனை இயக்குகிறார் . இதில் பார்வையற்றவராக நடிக்கிறாராம் வரலக்ஷ்மி. 

இதை அவரே தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதோடு இது தனக்கு சவாலான படமாக இருக்கும் என்றும், அதனால் தான் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். சாய் சமரத் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close