அப்பாவை காப்பாற்ற முடியவில்லை: கண்ணீர் விட்டு அழுத அதர்வா

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2018 10:20 am
atharva-murali-gets-emotional-on-stage-while-talking-about-his-father

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதர்வா தனது தந்தை குறித்து பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு அழுதார். 

நடிகர் முரளியின் மகன் அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அந்த படத்தில் முரளியும் கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார். பின் 2010ம் ஆண்டு மாரடைப்பால் நடிகர் முரளி உயிரிழந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் அதர்வா தமிழ் சினிமாவில் நம்பிக்கையான இளம்  ஹீரோவாக உருவெடுத்து வருகிறார். 

இந்நிலையில் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான செம  போத ஆகாத படத்தின் பிரோமோஷனுக்காக அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் . அதில் தனது தந்தை குறித்த  நினைவுகளை பகிர்ந்து கொண்ட அதர்வா உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

அப்போது அவர் பேசும் போது, "எனது தந்தை இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் எனது அக்கா நிச்சயதார்த்தம் நடைபெற்றது . அப்போது அப்பா என்னிடம் சம்பத்தம் இல்லாமல் ஏதேதோ பேசினார் .பின்னர் நான் அங்கிருந்து சென்ற ஒரு மணி நேரத்தில் அப்பா மாரடைப்பில் இறந்துவிட்டார். நான்  இருந்தால் ஏதாவது செய்து காப்பாற்றி இருப்பேன் . அது எனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக உள்ளது ” என கூறினார். 


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close