விஜய்யின் சர்காருக்கு எதிராக சுகாதாரத்துறை நோட்டீஸ்!

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2018 12:19 pm
health-department-sent-notice-to-vijay-and-arm-regarding-sarkar-poster

விஜய் புகைப்பிடிப்பது போன்ற சர்கார் படத்தின் போஸ்டரை நீக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படம் சர்கார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் விஜயின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22ம் தேதி வெளியானது. அந்த போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போன்று இருந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குறிப்பாக அன்புமணி ராமதாஸ், தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடுமையாக விஜய்யை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தார். 

ஆனால், இதற்கு முன்பும் இது போன்ற போஸ்டர் வெளியாகி இருப்பதாகவும் அப்போதுதெல்லாம் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் ஒரு தரப்பினர் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சர்கார் படத்தின் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டரை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

போஸ்டரை நீக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு திரைத்துறையினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் சுகாதாரத்துறை நோட்டிசில் தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close