சன்னிலியோன் வாழ்க்கை படத்தின் டிரைலர்!

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2018 05:22 pm

sunny-leone-movie-trailer-released

நடிகை சன்னி லயோனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை சர்ச்சைகள் நிரம்பியது. கனடாவில் இந்திய வம்சாவலி பெற்றோருக்கு பிறந்த சன்னி லியோன் சிறுவயதிலேயே பாதை தடுமாறிவிட்டார். ஆபாச நடிகையாக இருந்த அவர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உருவெடுத்து வருகிறார். 

அவரது வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் கரன்ஜெத் கவுர்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன். இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. சன்னி லியோன் பேட்டி கொடுக்கும் காட்சிகளோடு தொடங்கும் இந்த படத்தின் டிரைலர் பின் அவரது கதைக்குள் செல்கிறது. இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை ஆதித்யா தத் இயக்கி உள்ளார். 

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close