கீர்த்தி சுரேஷை கலாய்த்த தமிழ் படம் - 2

  திஷா   | Last Modified : 06 Jul, 2018 05:29 pm

tamil-padam-2-new-poster

தமிழ் படம்-2 படக்குழுவினரின் கண்ணில் சிக்காமல் தப்பிப்பது சற்று கடினம் தான் போல. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஓ.பி.எஸ் ஜெ நினைவிடத்தில் அமர்ந்து தியானம் செய்ததை நினைவூட்டியது. தொடந்து பல படங்களில் வரும் காட்சிகளையும் இவர்கள் ட்ரோல் செய்து விட்டனர். இவ்வளவு ஏன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட இவர்களிடம் மாட்டிக் கொண்டார். 

இப்படி பல தமிழ் சினிமாக்களையும், பொது விஷயங்களையும் கிண்டல் செய்து உருவாகியுள்ள இந்த தமிழ் படம் - 2வை சி.எஸ் அமுதன் இயக்கியுள்ளார். கிண்டல்களின் தொகுப்பாக வெளிவந்த இதன் முதல் பாகம் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து தறபோது இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. 

சமீபத்தில் சென்சாருக்கு சென்று யூ சான்றிதழ் வாங்கியதைக் கூட பாகுபலி போஸ்டர் போல் வடிவமைத்திருந்தார்கள். 

இதுவரை படத்தின் ஹீரோவான சிவாவை முன்னிலைப் படுத்தி போஸ்டர்கள் வெளியாகியிருந்த நிலையில் இன்று ஹீரோயினை மட்டும் வைத்து ஒரு போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள் படக்குழுவினர். சமீபத்தில் வெளியான நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷைத் தான் இந்தப் போஸ்டரில் கலாய்த்திருக்கிறார்கள். தொடர்ந்து கலாய்ப்பு ஒன்றையே மூலதனமாக வைத்து போஸ்டர்கள், போட்டோக்கள் வெளியாகி வருகிறது. இவை அனைத்தும் ஓவர் டோஸாக மாறிவிடாமல் இருந்தால் சரி...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close