விஜய்யின் 'சர்கார்' பட போஸ்டர் நீக்கம்!

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2018 05:11 pm

health-department-notice-issue-sarkar-poster-deleted-in-twitter-page

விஜய் புகைப்பிடிப்பது போன்ற சர்கார் படத்தின் போஸ்டர், தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடித்துள்ள படம் 'சர்கார்'. இந்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் விஜயின் பிறந்த நாளான கடந்த ஜூன் 21ம் தேதி வெளியானது. அந்த போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போன்று இருந்தது. இதற்கு அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், சர்கார் படத்தின் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டரை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. போஸ்டரை நீக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதே நேரத்தில், மக்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு திரைத்துறையினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் இருந்து விஜய் புகைப்பிடிப்பது போன்ற சர்கார் பட போஸ்டர் நீக்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close