100 நாள் படம் ஓடுவது எல்லாம் சாத்தியமில்லை! - கே.பாக்யராஜ்

  பால பாரதி   | Last Modified : 06 Jul, 2018 06:32 pm

vedigundu-pasanga-movie-audio-launch

’சினிமா உலகம் இருக்கும் சூழலில் இனிமே, 100 நாள் படம் ஓடுவது என்பது சாத்தியமில்லை!’ என படவிழாவில் பேசியிருக்கிறார் கே.பாக்யராஜ்.  

'ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ்' ஜனனி கே.பாலு, 'வீடு புரொடக்‌ஷன்ஸ்' தினேஷ்குமார் தயாரிப்பில், விமலா பெருமாள் இயக்கத்தில் ‘வெடிகுண்டு பசங்க’ என்ற படம் தயாராகி உள்ளது. மலேசியா கதைப் பின்னணியில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இதில் புதுமுகங்கள் தினேஷ் குமார், சங்கீதா கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இரட்டையர்கள் விவேக் - மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். படத்தில் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. படத்தின் ஆடியோவை கே.பாக்யராஜ் வெளியிட, இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும், நடிகர் நாசரும் பெற்றுக் கொண்டனர்.

இந்த விழாவில் கே.பாக்யராஜ் பேசுகையில், ”இப்படத்தின் ஹீரோ தினேஷ்குமார், எனக்கு வராத டான்ஸை மிகவும் நன்றாக ஆடியிருக்கிறார். இசையமைப்பாளர் விவேக் மெர்வினின் பாடல்கள் படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டுகிறது. இப்போது சினிமா இருக்கும் சூழலில் ஒரு படம் நூறு நாட்கள் ஓடுவது அபூர்வம்! அதற்கு கொஞ்சமும் சாத்தியமில்லை! திருட்டு விசிடி, இணையத் திருட்டு போன்றவற்றைத் தாண்டியும், படம் தரமானதாக இருக்கும் பட்சத்தில் படம் வெற்றி பெறும்" என்றார்.


 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close