’லக்‌ஷ்மி’ படம் ஒரு நடன திருவிழா - இயக்குநர் ஏ.எல்.விஜய்  

  Bala   | Last Modified : 08 Jul, 2018 02:29 am

lakshmi-is-a-dance-festival-director-a-l-vijay

பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் ’லக்‌ஷ்மி’ திரைப்படம் ஒரு நடனத் திருவிழாவாக இருக்கும் என்றார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.

நடனப்புயல் பிரபுதேவாவும், இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் இணைந்து உருவாக்கிய ’தேவி’ படம் சூப்பர் ஹிட்டானதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும், ’லக்‌ஷ்மி’ படத்துக்காக மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இதில், பிரபுதேவா ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். பேபி தித்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறார். நடனத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ், 12 சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

விரைவில், திரைக்கு வர இருக்கும் இந்தப் படம் பற்றி இயக்குநர் ஏ.எல்.விஜய் கூறுகையில்,“ரசிகர்கள், நீண்ட காலத்துக்கு பிறகு நடனத்தை மையமாக கொண்ட ஒரு திரைப் படத்தை பார்க்கப் போகிறார்கள். ’லக்‌ஷ்மி’ ஒரு மிகப்பெரிய நடன திருவிழாவாக இருக்கும். நடனம் என்பது ஒரு சிறந்த கலை வெளிப்பாடாகும். பிரபு தேவாவைத் தவிர வேறு யார் சர்வதேச தரத்துக்கு நடனத்தை வெளிப்படுத்த முடியும்? 'லக்ஷ்மி' நடனத்தை மட்டுமே சுவாசிக்கும் ஒரு குருவுக்கும், நடனத்தை சுவாசிக்க துடிக்கும் ஒரு சிஷ்யைக்கும் இடையேயான உண்மையான பிணைப்பை காட்டும் படம். நடனக்கலையை முடிந்த வரை முழுமையாக கொடுத்திருக் கிறோம். ட்ரெய்லர் படத்தின் மீதான ஆவலை அதிகமாகியிருக்கிறது. நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி தித்யா இருவரும் நடிப்புத் திறமையைக் காட்டியிருக்கிறாகள். பிரபுதேவாவின் நடனத் திறமைக்கு தனது இசையால் ஈடுகொடுத்திருக்கிறார் சாம் சி.எஸ். நிரவ்ஷா நடன காட்சிகளை மிகச்சிறப்பாக படம் பிடித்திருக்கிறார் “என்றார் இயக்குநர் ஏ.எல்.விஜய். 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close