• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

கிரிக்கெட்டும், கபடியும் மோதும் ‘தோனி கபடி குழு’!      

  பால பாரதி   | Last Modified : 07 Jul, 2018 10:20 am

dhoni-kabadi-kuzhu-a-film-that-has-cricket-and-kabadi-as-heroes

கிரிக்கெட்டையும், கபடியையும் மோத விட்டு ‘தோனி கபடி குழு’ என்கிற படத்தை உருவாக்குகின்றனர்.        

தமிழில் விளையாட்டை மையமாகக் கொண்ட பல படங்கள் வந்திருந்தாலும் கிரிக்கெட்டை மையமாக கொண்ட ’சென்னை - 28’ படமும், கபடியை மையமாகக் கொண்ட ’வெண்ணிலா கபடிக் குழு’ படமும் தான் சூப்பர் ஹிட்டானது! 

ஆகவே, இந்த இரண்டு விளையாட்டுக்கும் இருக்கும் மவுசைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இப்போது, கிரிக்கெட்டையும், கபடியையும் மோதவிட்டு ‘தோனி கபடி குழு’ என்கிற படத்தை உருவாக்குகின்றனர். 

இதில் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் வில்லனாக நடித்த அபிலாஷ் ஹீரோவாக நடிக்கிறார். துல்கர் சல்மானுடன் ’பட்டம் போலே’ மலையாளப் படத்தில் நடித்த லீமா நாயகியாக நடிக்கிறார். மேலும் தெனாலி, சரண்யா,செந்தில், புகழ், விஜித், பிரபாகரன்,ரிஷி, நவீன் சங்கர், சுஜின், பீட்டர் ஆகியோரும் நடிக்கிறார்கள். நந்தகுமார் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஐயப்பன் இயக்குகிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close