ட்விட்டரில் ட்ரெண்டாகும் தொடை நடுங்கி சர்க்கார்

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Jul, 2018 02:34 am
we-stand-with-thalapathy-trending-in-twitter

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவரவுள்ள சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலே சர்ச்சை ஆரம்பித்தது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. இந்தபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஜூன் 21 ஆம் தேதி வெளியானது. போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இருந்ததால் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து விஜய் புகைப்பிடிப்பது போன்ற அந்தக் காட்சியை நீக்க வேண்டும் என கண்டனங்கள் எழுந்தன. 

புகைப்பழக்கம் கொல்லும், புகைப்பழக்கம் புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற வாசகத்தை எழுதுபவர்கள் அதை பின்பற்றுவதில்லை. சர்க்கார் படத்தின் காட்சிகள் விஜயின் ரசிகர்களையும் புகைப்பிடிக்க தூண்டும் என பல கண்டனங்கள் எழுந்தன.

புகைப்பிடித்தபடி உள்ள விஜய்யின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என நடிகர் விஜய், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது. 

மேலும் புகைப்படத்தை உடனடியாக நீக்காவிட்டால் சட்டப்பூர்வமான நடவடிகைகள் மேற்கொள்ளப்படும் என பொது சூகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போல் வெளியிடப்பட்ட‘சர்கார்’படத்தின் போஸ்டர் நீக்கப்பட்டுள்ளது. 

முதன்முதலில் பலத்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியான சர்க்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்திலும், நடிகர் விஜய்யின் முகப்பு படத்திலிருந்தும் போஸ்டர் நீக்கப்பட்டுள்ளது.

விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நீக்கப்பட்டது. விஜயின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் #WeStandWithThalapathy என்ற ஹேஷ்டேக்கில் தங்களது ஆதங்கத்தை விஜய் ரசிகர்கள் கொட்டிவருகின்றனர்.

#WeStandWithThalapathy என்ற ஹேஷ்டேக்கில் இதற்கு முன் வெளிவந்த புகைப்பிடிப்பதுடன் அஜித் போஸ்டர், வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் புகைப்பட போஸ்டர் போன்றவற்றை பதிவிட்டு நியாயம் கேட்டு வருகின்றனர்.

இதற்கு மாறாக இன்னொரு கும்பல் #தொடைநடுங்கிசர்கார் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மிரட்டலுக்கு பயந்து போஸ்டரை நீக்கியுள்ளனர். நிஜமாகவே எடுபுடி சர்க்கார் தான் என விஜயை கலாய்த்து வருகின்றனர்.

பிரபலங்களின் இத்தகைய புகைப்பட காட்சிகள் இன்றைய இளைஞர்களுக்கு எதிர்மறை எண்ணங்களையே ஏற்படுத்தும். மிரட்டலுக்கு பயந்து எடுக்கப்பட்டதோ அல்லது பாதிப்பை கருத்தில் கொண்டு நீக்கப்பட்டதோ இன்றுடன் புகைப்பட சர்ச்சை முடிந்தால் போதும் இதற்கு பிறகாவது படத்தின் புரோமோஷனை கவனியுங்கள் என அட்வைஸ் சொல்கிறது மற்றொரு கேங்! 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close