விஸ்வாசம் படத்தின் இணைந்த மற்றொரு பிரபலம்!

  திஷா   | Last Modified : 08 Jul, 2018 02:25 am

viswasam-movie-update

சிவா இயக்கத்தில் அஜித் தற்போது விஸ்வாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அதோடு விவேக்கும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் டி.இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். 
தற்போது இந்தப் படத்தின் அப்டேட் என்ன தெரியுமா? இதில் குழந்தை நட்சத்திரம் அனிகாவும் நடிக்கிறாராம். 
கௌதம் மேனன் கூட்டணியில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து பிரபலம் ஆனவர் தான் இந்த அனிகா.

அதைத் தொடர்ந்து அனிகா நிறைய படங்கள் நடித்துவிட்டார். குறிப்பாக 'மா' என்ற குறும்படத்தில் பள்ளி சிறுமி, கர்ப்பமாகும் கேரக்டரிலும் நடித்திருந்தார். தற்போது விஸ்வாசம் படத்தில் இணைந்திருக்கும் இவர் இதிலும் அஜித்தின் மகளாக நடிக்கிறார் என செய்திகள் கூறுகின்றன. ஆனால் இந்த செய்தி இன்னும் உறுதிப் படுத்தப் படவில்லை. அதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். அதோடு, விஸ்வாசம் படத்தில் அஜித் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close