போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் போலீஸில் சிக்கினார்!

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2018 12:26 pm

bharathiraja-s-son-actor-manoj-held-for-drunk

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ், குடிபோதையில் கார் ஓட்டியதால், காரை கைப்பற்றிய போலீஸார் அபராதமும் விதித்தனர்.  

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ், ’தாஜ்மஹால்’ படத்தின் மூலமாக சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமாகி, பிறகு ’சமுத்திரம்’, ’கடல் பூக்கள்’, ’வருஷமெல்லாம் வசந்தம்’, ’அல்லி அர்ஜூனா’, ’அன்னக்கொடி’, ’வாய்மை’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இப்போது அவர், தனது தந்தை பாரதிராஜா நடத்தி வரும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் மனோஜ்  நேற்று இரவு, ஹாரிங்டன் சாலையில் இருக்கும் தனது வீடுக்கு செல்வதற்காக பி.எம்.டபிள்யூ சொகுசு காரை ஓட்டியபடி நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வந்து கொண்டிருந்தார். கார் தாறுமாறாக வந்ததால் அங்கிருந்த போக்குவரத்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே காரை மடக்கிப் பிடித்தனர், அப்போது நடிகர் மனோஜ், குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. 

இதனால், போக்குவரத்துப் போலீசார், குடிபோதையில் கார் ஓட்டியதால் மனோஜிற்கு ரூ.2,500 அபராதம் விதித்து ரசீது வழங்கினர். பிறகு, அந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை அனுப்பி காரை எடுத்துச் செல்லும்படி தெரிவித்தனர். இதையடுத்து மனோஜ், ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்கு சென்றார்.
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close