நயன்தாரா சம்பளம் ரூ.5.5 கோடி ஆனது!

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2018 05:00 pm
nayantara-s-salary-was-rs-5-5-crore

ஏ.எல்.விஜய் இயக்கும் படத்திற்காக நயன்தாராவுக்கு, ரூ.5.5 கோடி சம்பளம்  பேசப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது! 

தமிழ் சினிமாவின் ’நம்பர் ஒன்’ நாயகியாக வலம் வருவதோடு, நடிகைகளிலேயே அதிகமாக சம்பளம் வாங்குவதிலும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் நயன்தாரா. தொடர்ந்து படங்கள் ஹிட் ஆவதால் நயன்தாராவுக்கு வினியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது! இதனால் தற்போது அவர், ஒரு படத்துக்கு 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆனாலும், அவருக்கு பட வாய்ப்புகள் குவிகிறது!  

அஜித்தின் ’விஸ்வாசம்’, ’கோலமாவு கோகிலா’, ’இமைக்கா நொடிகள்’, ’கொலையுதிர் காலம்’, ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என நயன்தாராவுக்கு படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. 

இதற்கிடையே, இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடக்கிறதாம்! ’அறம்’ படத்தைப் போலவே, நாயகியை மையமாகக் கொண்ட கதை என்பதால் இதில் நயன்தாரா தான் நடித்தாக வேண்டுமென பிடிவாதமாக இருக்கிறாராம் இயக்குநர் ஏ.எல்.விஜய். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட நயன்தாரா, தனது சம்பளத்தையும் சர சரவென உயர்த்தி உள்ளார்! இந்தப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ.5.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது!
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close