மார்டன் ஸ்டைலுக்கு மாறிய பாரதிராஜா!

  பால பாரதி   | Last Modified : 07 Jul, 2018 04:11 pm

bharatiraja-who-changed-to-modern-style

’ஓம்’ படத்தில் ஹீரோவாக நடிக்கும் இயக்குநர் பாரதிராஜா, இந்தப் படத்தில் தனது வழக்கமான கிராமத்துப் பாணியிலிருந்து விலகி, மார்டன் ஸ்டைலுக்கு மாறியிருக்கிறார்!  

தேனி அல்லிநகரத்திலிருந்து, சினிமா ஹீரோவாகும் கனவோடு தான் சென்னைக்கு வந்தார் பாரதிராஜா! ஆனால் காலம், அவரை இயக்குநராக மாற்றியது! சினிமாவில் இயக்குநராக கொடி கட்டிய பிறகு, ’கல்லுக்குள் ஈரம்’ படத்தின் மூலமாக தனது கதாநாயகக் கனவை நிறைவேற்றிக் கொண்ட பாரதிராஜா, பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை!  நீண்ட வருடங்களுக் குப் பிறகு மணிரத்னத்தின் ’ஆயுத எழுத்து’ படத்தில் வில்லனாக வந்தார்! அதற்குப் பிறகு, ’ரெட்டைச் சுழி’ படத்தில் கதையின் நாயகனாக வந்து கலக்கினார். தொடர்ந்து ’பாண்டிய நாடு’, ’ குரங்கு பொம்மை’ ’படை வீரன்’ போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் வெளுத்து வாங்கினார். 

இந்நிலையில் பாரதிராஜா, ’ஓம்’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து, படத்தை அவரே இயக்குகிறார். வயதால் முதுமையும், மனதால் இளமையுமாக இருக்கும் ஒரு முதியவனுக்கும், இளம் பெண்ணுக்குமான காதலை சொல்லும் இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் பாரதிராஜா, இந்தப் படத்தில் தனது வழக்கமான கிராமத்துப் பாணியிலிருந்து விலகி, மார்டன் ஸ்டைலுக்கு மாறியிருக்கிறார்! சாலை சகாதேவனின் ஒளிப்பதிவில், ரகுநந்தனின் இசையில், வைரமுத்துவின் பாடல் வரிகளில் உருவாகும்  ’ஓம்’ திரைப்படம், முழுக்க முழுக்க வெளி நாடுகளிலேயே படமாக்கப்படுகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.   
    
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close