மோகன்லாலின் ஒடியன் டீசர் வெளியீடு!

  திஷா   | Last Modified : 07 Jul, 2018 05:01 pm

mohanlal-s-odiyan-teaser

‘வில்லன்’ படத்திற்கு பிறகு நீரளி, ஒடியன், ட்ராமா ஆகிய மலையாளப் படங்களிலும், சூர்யா - கே.வி.ஆனந்த் இணைந்திருக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார் மோகன்லால். இதில் ‘ஒடியன்’ படத்தை ஸ்ரீகுமார் மேனன் இயக்குகிறார். இதில் மோகன் லாலுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜ், சித்திக், இன்னொசன்ட் ஆகியோர் நடித்துள்ளனர்.

எம்.ஜெயச்சந்திரன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு சாம்.சி.எஸ் பின்னணி இசையமைக்கிறார். ஷாஜி குமார் ஒளிப்பதிவாளராகவும், பீட்டர் ஹெயின் ஸ்டன்ட் இயக்குநராகவும், ஜான் குட்டி படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர். ஃபேன்டஸி த்ரில்லரான இந்தப் படம் 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது.

‘ஆசிர்வாத் சினிமாஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர், மேக்கிங் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. ஒடியன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இதன் டீசரும் வெளியாகியுள்ளது. இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் லால் ரசிகர்கள். 


 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close